அது ஒரு டைம் பாஸ்.. திருமண வதந்தி பற்றி கருத்து தெரிவித்த ராஷ்மிகா…!
Author: Rajesh2 March 2022, 2:34 pm
தொடர்ந்து நடிகைகள் ஒரே நடிகர் உடன் படங்களில் நடித்தால் அவர்கள் பற்றி காதல் கிசு கிசு வருவதெல்லம் சினிமா துறையில் சகஜம். அப்படி விஜய் தேவரகொண்டா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வருபவர் தான் நடிகை ராஷ்மிகா.
அவர்கள் காதலித்து வருவதாக தொடர்ந்து பல முறை செய்திகள் வந்தாலும் இருவரும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்ய போகிறார்கள் என்ற தகவல் கூட வந்தது.
இதனிடையே தனியார் மீடியா தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், இந்த வதந்தி குறித்து முதல் முறையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘அது டைம் பாஸ் வதந்தி. என் திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்’ என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.