இதை சொல்றதுக்கு கூச்சமே இல்ல… சின்ன வயசில் இருந்தே அந்த பழக்கம் இருக்கு – ராஷ்மிகா பளீச்!

Author: Rajesh
14 February 2024, 3:33 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார். கடைசியாக இந்தியில் அனிமல் படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகினார்.

rashmika mandanna -updatenews360

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது., அதாவது அவருக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு பழக்கம் உள்ளதாம். ஆம் , தன் வீட்டில் இருக்கும் அத்தனை பெரியவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை எப்போதும் வழக்கமாக கொண்டிருக்கிறாராம். அது யாராக இருந்தாலும்… தன் வீட்டில் வேலை பார்க்கும் மூத்தவர்களின் காலில் விழுந்தும் ஆசீர்வாதம் வாங்குவாராம் ராஷ்மிகா.

அப்படி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்போது அது பல நன்மைகளை தருவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறது. அப்படி செய்வதால் எனக்கு கவர்வமே இருப்பதில்லை என கூறியுள்ளார். இதை சொல்வதற்கு கூச்சம் இல்லை என்று வெளிப்படையாக பேசி வியக்கவைத்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த நல்ல பழக்கத்தை எல்லோரும் பாராட்டியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 389

    0

    0