தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமான இவர் அதன் பின் விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ரோல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அதாவது, புஷ்பா பட வாய்ப்பு மட்டும் எனக்கு வந்திருந்தால் நான் உடனே ஓகே சொல்லியிருப்பேன். அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நான் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன் என கூறி அவரின் நடிப்பை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி ராஷ்மிகாவின் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை திட்டி தீர்த்தனர்.
தற்போது இது குறித்து தெளிவான விளக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்,
“”அன்பிற்குரிய நண்பர்களே…
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ரஷ்மிகா மந்தனா, ” வணக்கம் அன்பே.. இப்போதுதான் இதைப் பார்த்தேன்.. விஷயம் என்னவென்றால் – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். எனவே இதை விளக்குவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று நான் விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும், உங்கள் மீது நான் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.. மீண்டும் உங்கள் ” ஃபர்ஹானா” படத்திற்கு ஆல் தி பெஸ்ட் என கூறி பெருந்தன்மையோடு பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.