திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா.. கொட்டும் கோடிகள்.. சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா தலையே சுத்திடும்..!

Author: Vignesh
14 June 2024, 3:30 pm
rashmika mandanna -updatenews360
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

rashmika

மேலும் படிக்க: திருமணமான நடிகையுடன் பஜக்.. பஜக்.. ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிய காரணமே இதுதான்.. அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..!

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார். கடைசியாக இந்தியில் அனிமல் படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகினார்.

rashmika mandanna -updatenews360

மேலும் படிக்க: நயன் JUMP.. இருடா.. நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்கி.. ட்ரெண்டாகும் வீடியோ..!(Video)

இந்நிலையில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2 இந்த திரைப்படத்திலிருந்து வெளிவந்துள்ள பாடல் தற்போது youtube தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராஷ்மிகா நடித்த அனிமல் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது. பெண்களை மோசமாக நடத்தும் வகையில், வந்த காட்சிகளை பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா சம்பள விஷயத்தில் நயன்தாரா திரிஷாவை மிஞ்சிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்க 15 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். அதன் பின்னர், நடந்த பேச்சு வார்த்தையில் ரூபாய் 13 கோடி அவருக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா திரிஷா ரூபாய் 10 முதல் 12 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 70

0

0

Leave a Reply