எனக்கு 12 வயதில் தங்கச்சி இருக்கா.. வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்த ராஷ்மிகா!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2025, 11:55 am

12 வயதில் தனக்கு தங்கை உள்ளதாக வெளியுலகத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகம் செய்து வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகை ராஷ்மிகா தற்போது PAN இந்தியா நாயகியாக உச்சம் பெற்றுள்ளார். கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் பரபரப்பான நாயகியாக மாறினார்.

இதையும் படியுங்க : பழம்பெரும் பாடகர் கேஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. திரையுலகம் ஷாக்!

தொடர்ந்து அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி உச்ச நடிகையாக திகழ்ந்தார். பாலிவுட்டில் இவர் நடித்த அனிமல் படம் ராஷ்மிகாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.

மேலும் சல்மான் கானுடன் சிக்கந்தர், தனுஷ் உடன் குபேரா என டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

தனக்கு 12 வயதில் தங்கை உள்ளதாகவும் எனக்கு அவளுக்கு 16 வயது வித்தியாசம் என ராஷ்மிகா தெரிவித்துள்ளது சினி உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து மேலும் பேசிய ராஷ்மிகா, ஒரு கட்டத்தில் நான் அவளுடைய அக்கா என்று சொல்லாமல் அவளை வளர்த்து வந்தோம்.

இது உன்னோட வாழ்க்கை, எங்களை அதில் சேர்க்காதே என பெற்றோர்கள் என்னை அடிக்கடி சொல்வார்கள். என் தங்கை என்ன கேட்டாலம் இப்போது எதுவேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் எல்லாமே சுலபமாக அவளுக்கு கிடைக்கக்கூடாது என நினைத்துள்ளேன்.

Rashmika Mandanna shares emotional note for little sister

காரணம் நான் தற்போது ஒரு பெரிய நடிகையாக வர, நான் வளர்ந்ததே காரணம். அப்படித்தான் அவளும் வளர வேண்டும் என நினைக்கிறேன்.

Rashmika Mandanna shares emotional note for little sister on Raksha Bandhan

நிச்சயம் அவள் குறிப்பிட்ட வயதை அடைந்தததும், கண்டிப்பாக அவளுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை கொடுப்போன் கூறி நெகிழ்ந்துள்ளார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…