பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!
Author: Selvan12 January 2025, 2:00 pm
சோகமா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு
இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனான.இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ்,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாகவும்,தனுஷ் கூட குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது,அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு சென்று காலில் பெரிய கட்டு போட்டு ஓய்வில் இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காலில் கட்டுடன் இருக்கின்ற போட்டோவை பதிவிட்டு விரைவில் படப்பிடிப்புக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் குபேரா மற்றும் சிக்கந்தர் படத்தின் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என பதிவிட்டுள்ளார்.சிக்கந்தர் படம் வரும் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளதால்,ராஸ்மிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.