காதலருடன் ராஷ்மிகா செய்த செயல்:வெளிவந்த புகைப்படம்…எங்க போய் முடியும்னு தெரியல..!

Author: Selvan
7 December 2024, 6:28 pm

ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா காதல்

தென்னிந்திய திரையுலகை தாண்டி, ஹிந்தி திரையுலகிலும் வெற்றிகரமாக மின்னி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா.தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்து வருகிறார்.

Rashmika Mandanna Vijay Deverakonda relationship

இவர் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவுடன் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய இருவரின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ராஷ்மிகா நேரடியாக உறுதிப்படுத்தாத போதிலும்,சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போதே,அவர் தனது காதலரை பற்றி கூறிய வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படியுங்க: சமந்தாவுடன் நியூயார்க்…சோபிதாவுடன் எங்கே தெரியுமா…நாக சைதன்யா போட்ட அடுத்த பிளான்..!

“எனது காதலரை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்,” என அவர் கூறியதால்,விஜய் தேவரகொண்டாவின் உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தியதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில்,புஷ்பா 2 படம் வெளியான பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்துடன் ராஷ்மிகா,புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Rashmika Vijay Deverakonda viral photos

தற்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவலும் வந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையின் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

  • Oviya interview about controversies கல்யாணம் எப்போ? எனக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா..!