சமந்தா நிலைமை தான் ராஷ்மிகாவுக்கு…விஜய் தேவரகொண்டா குடும்பத்தை தாக்கிய பயில்வான்…!
Author: Selvan8 December 2024, 5:14 pm
ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்
சுகுமார் இயக்கத்தில் வெற்றிப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ராஷ்மிகா மந்தனா முதலில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி பின்பு சினிமாவில் நடிக்க வந்தவர்,இவருக்கு முதலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து,பின்பு கல்யாணம் நின்றது.
இவர் நடித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்று தந்தது.முதல் படம் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்தன.அப்படி இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்த முத்த காட்சியும் பயங்கர ஹிட் ஆனது.
இதையும் படியுங்க: விவாகரத்தை அறிவிச்சது இதனால் தான்…மனம் திறந்த ஜெயம் ரவி..!
இதையடுத்து ராஷ்மிகா பெரிய பெரிய பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.அப்படி அவருக்கு பெரிய வாய்ப்பையும் புகழையும் கொடுத்து படம் தான் புஷ்பா.இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு விரைவில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடக்க உள்ளதாக செய்தியும் பரவி வருகிறது.இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஷ்மிகா தான் நடித்த புஷ்பா 2 படத்தை விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் தான் தியேட்டரில் பார்த்தார்.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக மட்டுமல்ல மனைவியாகவும் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் தனது தாடியை ராஷ்மிகா மந்தனாவின் காலில் வைத்து தேய்ப்பது போலவும்.பின் ராஷ்மிகா அவரது காலை அல்லு அர்ஜூனின் தலையில் வைப்பார்.இப்படி படம் முழுக்க பீலிங் காட்சிகள் தான்.
இந்தப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம்,ட்ரிபுள் எக்ஸ் பட காட்சிகள் போல் உள்ளது. பேருக்கு தான் உடை போட்டு இருக்கிறார்கள்.ரெண்டு பேரும் இந்தப் படத்தில் எல்லைமீறி விளையாடி இருக்காங்க.
ராஷ்மிகா மந்தனாவிடமிருந்து இனி எடுப்பதற்கு எதுவும் இல்லை எனும் அளவிற்கு அல்லு அர்ஜூன் விளையாடி உள்ளார்.இனிமேல் அதில் கை வைத்தால் அது எச்சில் இலை தான் என மிக கேவலமாக பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி,ராஷ்மிகா இனி சினிமாவில் நடிக்க கூடாது என்று விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் கூற வேண்டும்.இல்லையென்றால் சமந்தாவை நாக சைதன்யா துரத்திவிட்ட மாதிரி நடந்துவிடும் என அருவருப்பாக பேசியுள்ளார்.இதனால் ராஷ்மிகா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.