யாரா இருந்தால் எனக்கென்ன? சூர்யாவுடன் நடிக்க கறாராக கண்டீஷன் போட்ட ராஷ்மிகா!
Author: Rajesh29 February 2024, 8:53 am
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்தியில் கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இப்படியான நேரத்தில் தான் ராஷ்மிகா நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புறநானுறு படத்தில் நடிக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அதற்கு அவர் எனக்கு சொல்லப்போனால் கால்ஷீட் கொடுக்கமுடியாத அளவிற்கு நான் பிசியாக இருக்கிறேன். சூர்யா – சுதா கொங்கரா என பெரிய கூட்டணி இருப்பதால் தான் சம்மதிக்கிறேன்.
இருந்தாலும் நான் நேஷனல் கிரஷ் என இந்திய அளவில் பிரபலமாக இருப்பதால் நிச்சயம் இந்த படத்திற்கு ஸ்டார் வேல்யூ கூடும் எனவே எனக்கு சம்பளம் ரூ. 3 கோடி கொடுத்தாகவேண்டும். அதில் ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டேன். நீங்கள் யோசித்துவிட்டு சொல்லுங்கள் என கறாராக கூறிவிட்டாராம் ராஷ்மிகா. படக்குழு எவ்வளவு பேசிப்பார்த்தும் தன் நிலையிலிருந்து இறங்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை நடிக்க வைக்க புறநானூறு படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனை அறிந்த கோலிவுட் இந்தம்மாவுக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது என முணுமுணுக்கிறது கோலிவுட்.