சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த திரைப்படம் இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ. 13 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்ப்போது தங்கலான் படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க பா ரஞ்சித் நடிகை ராஷ்மிகா மந்தனாவை தான் அனுகி சென்றாராம். ஆனால் பா ரஞ்சித் கொடுத்த தேதியும் அவர் கொடுத்த தேதியும் சிக்கல் ஏற்பட்டதால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது.
அதாவது, ராஷ்மிகா மந்தனா வேறு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவருக்கு தங்கலான் திரைப்படத்திற்கு டேட் ஒதுக்குவதிலே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விலகி விட்டார். அதன் பிறகு மாளவிகா மோகனனை பா. ரஞ்சித் தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஒரு வேலை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தால் அவரை வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.