மானாவாரியாக லிப் லாக் கொடுத்த ராஷ்மிகா.. கோடி கோடியா கொட்டும் பணம்..!

Author: Vignesh
17 October 2023, 10:41 am

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி சினிமா வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார். கடைசியாக நடித்த வாரிசு படத்திற்கு சுமார் ரூ 3 கோடி சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். அனிமல் திரைப்படம் ஹிட் அடித்துவிட்டால் மேலும் அவரது சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை கேட்டு பாலிவுட் நடிகைகளே ஆடிபோய்ட்டாங்களாம். இதனிடையே, அதிக அளவு லிப் லாக் காட்சிகளில் நடிப்பதற்காக ராஷ்மிகா அவரது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ