விஜய்யை காதலிக்கிறேன்…. ஒருவழியா மௌனம் களைத்த ராஷ்மிகா – வைரலாகும் ட்விட் பதிவு!
Author: Rajesh28 February 2024, 9:39 am
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து அப்போதே கிசுகிசுக்கள் வெளியானது. அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.

ஆனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. இதனிடையே இந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது. அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்த விஜய் தேவர்கொண்டா, எனது திருமணம் குறித்து வெளிவரும் செய்தியில் உண்மையில்லை. வருடத்திற்கு ஒரு முறை எனக்கு ஊடகங்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களாகவே இது போன்ற செய்திகளால் என்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள் என அவர் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
What qualities should one have to become #RashmikaMandanna's husband?
— Rashmika Delhi Fans (@Rashmikadelhifc) February 26, 2024
She is National Crush of India
Her husband must be special.
Her husband should be like VD.
I mean Very Daring ? Who can protect her.
We call her a queen ? then her husband should also be like a king ? pic.twitter.com/UwC4lyHBr4
ஆனால், தற்ப்போது ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டாவை காதலிப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆம், ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஷ்மிகா மந்தனாவின் கணவனாக வருவதற்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் தெரியுமா? அவர் இந்தியாவின் நேஷனல் க்ரஷ்…. அவளுடைய கணவர் சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
அவங்க கணவர் ‘VD” மாதிரி இருக்கவேண்டும் அதாவது, “VD” என்றால் ( Very Daring ) என கூற அதற்கு ராஷ்மிகா, “That’s very true” என பதில் அளித்துள்ளார். இதன் மூலம் VD – vijay devarakonda என்பதை மறைமுகமாக அந்த ரசிகர் கூறியிருப்பதை ராஷ்மிகா மறைமுகமாக அது போன்ற கணவர் தான் வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.