இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமான ராஷ்மிகா அதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதனால் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் “ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க” என்று ரிப்ளை செய்து அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் ராஷ்மிகா.
இப்படி அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வரும் ரஷ்மிகா தற்போது பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ” அனிமல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகாவை சூழ்ந்து ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முந்தியடித்தனர். அப்போது ராஷ்மிகாவை நெருங்கி வந்து அவர் முன் போனை காட்டிய நபர் ஒருவரை பாடிகார்ட் இழுத்து அப்புறத்தள்ளினார். இதை பார்த்து பதறிப் போன ராஷ்மிகா அவரை விடுங்க ப்ளீஸ் என கெஞ்சினார். பின் ரசிகை ஒருவருடன் செல்பி எடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:
https://www.instagram.com/reel/CsTrQKuIqoU/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
This website uses cookies.