புகழ்பெற்ற வர்த்தகத் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. அவரது அமைதியான தலைமையின் மூலம், ரத்தன் டாடா $5-பில்லியன் குழுவை 100 நாடுகளில் செயல்பாடுகளுடன் $100-பில்லியனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவின் கட்டமைப்பை வடிவமைத்தார்.
தனக்கு சொந்தமான ஒவ்வொரு வணிக முயற்சியிலும் அவர் இந்தியாவை முதன்மைப்படுத்தினார். ரத்தன் டாடா தனது வணிக புத்திசாலித்தனத்தால் பிரகாசித்தார். வணிகம் சார்ந்த திறமைசாலியாக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் ரத்தன் டாடா பார்க்கப் பட்டார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து மக்களின் மனதில் இடத்தைப் படித்தார். வணிக ரீதியாக அவரது திட்டங்களும்,தொழில்களும் முன்னிலையில் இருந்தாலும் கூட ரத்தன் டாடாவின் எண்ணங்கள் எப்போதும் எளிய மக்களையும் அவர்களின் வாழ்க்கை அமைப்புகளையும் சுற்றி இருந்தது.
இதனிடையே ரத்தன் டாடாவின் மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று வரை பலரால் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பலரும் ரத்தன் டாடாவின் நற்குணங்களை பற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அமிதாபச்சன் ரத்தம் டாடாவுடன் ஒரு சுவாரசியமான சந்திப்பையும் அப்போது நடந்த சம்பவத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதாவது ரத்தன் டாடா லண்டனுக்கு விமான நிலையத்தில் சென்றதாகவும் இருவரும் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய போது ரத்தம் டாடா தனது ஊழியர்களை கண்டுபிடிக்க முடியாததால் அவர்களுக்கு போன் செய்ய முயற்சித்த போது அவரிடம் பணம் இல்லையாம்.
அந்த நேரத்தில் அவர் திரும்பி வந்து அமிதாப் நான் உங்களிடம் சிறிது படம் கடனாக வாங்கலாமா? என்னிடம் ஃபோன் செய்யக்கூட இப்போதைக்கு பணம் இல்லை என கேட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியோடு கூறினார். பின்னர் அமிதாப்பச்சன் தன் கையில் இருந்த பணத்தை ரத்தன் டாடாவிடம் கொடுத்திருக்கிறார். இதனை ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு சரியான நேரம் பார்த்து Kaun Banega Crorepati நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.