மின்மினி எப்படி ராட்சசன் ஆனது; ராம்குமார் செய்தது என்ன?

Author: Sudha
3 July 2024, 12:49 pm

2018 வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பயமுறுத்திய திரைப்படம் ராட்சசன்.

முண்டாசுப்பட்டி இயக்கிய ராம்குமாரின் இரண்டாவது படைப்பு இது.இந்த கதைக்காக 2 வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் ராம்குமார்.இதற்காக சென்னையில் நடந்த பல குற்றங்கள் பின்னணி குறித்து படித்து கதையை உருவாக்கினார்.

2018 இன் சிறந்த 10 படங்கள் பட்டியலில் ராட்சசன் திரைப்படமும் இடம் பெற்றது.

இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் மின்மினி.
இந்த ராட்சசன் தலைப்பை சி.வி.குமார் பதிவு செய்து வைத்திருந்தார்.அவரிடம் பேசி இந்த பெயரை தயாரிப்பாளர் பெற்றார்.

சிறு வயதில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட
ரஷ்ய கொலைகாரன் அலெக்ஸாண்டர் ஸ்பெசிஃப்ட்செஃப் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ராட்சசன்.
இதில் கிறிஸ்டோபர் ஆக மிரட்டிரியிருப்பார் சரவணன். இவர் “நான்” படத்தில் நடித்தவர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
ஒனிரோஸ் திரைப்பட விருதுகளில் சிறந்த ஒலிப்பதிவு சிறந்த த்ரில்லர் திரைப்படத்திற்கான விருதுகளை வென்றது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…