கடவுளே எப்படியாச்சு விஜய் மகன் கூட அது நடக்கணும்: புலம்பி தவிக்கும் ரவீனா!!

Author: Vignesh
6 April 2023, 1:30 pm

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

raveena daha - updatenews360

தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்தார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் .

raveena daha - updatenews360

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. தற்போது, சஞ்சய் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் ரவீனா தாஹா, விஜய் மகனுடன் நடிக்க ஆசை என்று தெரிவித்து இருந்தார்.

இதனை இணையத்தில் விஜய் மகன் சஞ்சய்யுடன் ரவீனா காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, ரவீனா தாஹா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய் சாரை தனக்கு ரொம்ப புடிக்கும், ஆனால் அவருடன் நடிக்க முடியாது.

அதனால் விஜய் மகன் சஞ்சய் கூடயாவது ஹீரோயினாக நடிச்சிடனும்-னு சொன்னேன் என்றும், சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன் என்றும், அதை தன்னிடம் எல்லோரும், சஞ்சய் ரவீனாவை டேட் பண்றாங்க, டேட் பண்ணனும்னு ஆசைன்னுலா போட்டுட்டாங்க என்று ரவீனா தாஹா புலம்பியிருக்கிறார்.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 872

    4

    8