போன வருஷம் இந்த நாட்டின் பிரதான பிரச்சனை எங்க கல்யாணம் – முதல் திருமண நாளை கொண்டாடும் வைரல் ஜோடி!

Author: Shree
2 September 2023, 3:02 pm

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாடும் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராமில் அது குறித்து நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

எப்படி ஆரம்பிப்பது….எப்புடி சொல்லுறது? ஒரு வருஷம் வேகமா போய்டுச்சு… போனவருஷம் இந்த நாட்டோட பிரதான பிரச்சனை எங்க கல்யாணம்… போற இடம் எல்லாம் எக்ஸ்போ பீஸ் போல லுக் அது போக…இது எப்படி சத்தியம் ஆச்சு…நிச்சயம் பணத்துக்காகத்தான், 3 மாசம் தாங்குமா, பார்ப்போம் இது எவளோ நாளைக்கு , சீக்கிரம் ரெண்டு அடிச்சிகிது வீடியோ பேட்டி கொடுக்கும் பாருங்க… அப்பப்பாஹ்

அப்படி நம்ம ஆசை பட்டு அதுக்கு சின்சியர் இருக்குற ஒரு வாழ்க்கை கிடைத்தது எனக்கு வரம். எனக்கும் நிறையா தோன்னுச்சு இவ பயங்கரா attitude போல..கோலம் போடுறது, காபி அல்லது சமையல் அப்புறம் வீடு வேலை எல்லாமே வேலையாட்கள் வச்சி தான் செய்யணும் போல என நினச்சேன்.

அதிகாலை எழுந்து, சுத்தி சுத்தி கோலம், சூப்பரான காபி கொஞ்சம் கண்ராவியான சமையல்… நல்லா இருக்கு பார்ப்போம் 3 மாசத்துக்கு அப்புறம் ஸ்விக்கி அல்லது டன்ஸூ வானு நெனச்சேன்… பாப்பா கலக்கிட பா..இது நம்ம டிவில பாக்குற சீன்லாம் இல்லை…அதுக்காக திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…ஆனால் லவ் சும்மா உங்க வீடு அல்லது எங்க வீட்டு இல்ல…முரட்டு லவ் பண்றா..என்ன இவளுக்கு என்மேல ரொம்ப லவ் வந்துடுச்சுனா காட்டியே தீருவேன்னு உடனே சமைக்க போய்டுவா. அப்போதான் எனக்கு என்னோட இன்சூரன்ஸ் பாலிசி நியாபகம் வரும்…போன வரம் தான் பீன்ஸ் செய்ய ஆரம்பிச்சா…தேவுடாஆ..

நாங்க பிரிஞ்சிட்டோம் அப்புறம் நாங்க சோகத்தில் வாழுறோம் 11 மாசம் யூட்யூப்ல எங்க வெச்சி செய்யும் போதெல்லாம்..அம்மு நம்ம வாழ்ந்து கட்டணும் அம்முனு சொல்லி பைத்தியமா இன்னும் லவ் பண்ணுவா…அப்போ வரும் அந்த யூடியூப் மேல அப்படி ஒரு கோவம். வீக்கெண்ட் அண்ணா ஹோட்டல் அதுலயும் அவனுங்க கொண்டுவற எதுவும் நல்லா இல்லை பட் அம்பியன்ஸும் தயாரிப்பும் ல ஒரு ஃபர்ஸ்ட் வாய் சாப்பிட்டு யம்மி அம்மு சொல்லுவா பாருங்க…அப்போ என்னோட மூஞ்சி சரி விடுங்க…

இப்படி போற ஒரு சைட்ல அவளோட உண்மையான நேர்மையான அன்பு அதுக்கு நான் தகுதியானவன் தெரியல. நம்ம வாழ்க்கை எவ்ளோ அழகுனா நம்ம சந்தோசமா சிரிக்க வெச்சி பாக்குற பொண்ண விட, சந்தோஷத்ல அலை வீசற பொண்ணுதான் நமக்கும் அழகு. நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் – என் மனைவி.. நல்ல கணவன் அமைவது இறைவன் வளர்த்த விதம் – என் அம்மா! என ஒரு நீண்ட பதிவு இட்டு மனைவி மீதுள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 344

    0

    0