எனக்கு இன்னொரு பெயர் இருக்கு…தெறிக்க விடும் அரசியல் களம்…மிரட்டிய ரவி மோகனின் டைட்டில் டீசர்..!

Author: Selvan
29 January 2025, 1:59 pm

அரசியல்வாதியாக நடிக்கும் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தற்போது டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு வடசென்னை பகுதியில் நடக்கும் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

Karate Babu Movie Update

இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசியல் வாதிகள் விவாதம் செய்யும் காட்சிகளை வைத்து,டீசரை உருவாக்கி படக்குழு வெளியிட்டுள்ளது.அதில் ரவி மோகன் கடைசியில் எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு என தெரிவித்து படத்தின் டைட்டிலை கூறுவார்.

இதையும் படியுங்க: 15 வருட காதல்…விஷாலுடன் திருமணமா…உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!

படத்தில் ரவி மோகன் சண்முகபாபுவாக நடித்துள்ளார்,அவருடைய இன்னொரு பெயரான கராத்தே பாபுவை படத்தின் டைட்டில் ஆக வைத்துள்ளனர்.இப்படத்தில் ரவி மோஹனுடன் கே.எஸ்.ரவிக்குமார்,நாசர்,விடிவி கணேஷ்,பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்,ரவி மோகனுக்கு ஜோடியாக டவ்டே ஜிவால் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பதாக இருந்த நிலையில், அவர் திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.பக்கா அரசியல் பாணியில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படம் ரவி மோகனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?