ரவி மோகன் படத்தில் சிக்கல்…திடீரென விலகிய இசையமைப்பாளர்…அதிர்ச்சியில் படக்குழு..!

Author: Selvan
28 January 2025, 6:00 pm

ஹரிஷ் ஜெயராஜ் விலகியதற்கு காரணம் என்ன..?

நடிகர் ரவி மோகன் கடந்த சில வருடமாக சினிமா வாழ்கையிலும்,தனிப்பட்ட வாழ்கையிலும் சரிவை சந்தித்து வருகிறார்.ஆரம்ப கால கட்டத்தில் பல கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த ரவி மோகன் கடந்த பல வருடமாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார்.

Sam CS replaces Harris Jayaraj

கடந்த வருடம் தீபாவளி அன்று வெளிவந்த பிரதர் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இந்த நிலையில் சமீபத்தில் பொங்கல் அன்று வெளியான காதலிக்க நேரமில்லை படம் ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்தாலும்,வசூலை பெறாமல் தவித்து வருகிறது.

இதையும் படியுங்க: மதகதராஜாவுக்கு சவால் விடும் விமல்…6ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் தேதியை அறிவித்த”படவா”படக்குழு…!

இந்த நிலையில் தன்னுடைய அடுத்தடுத்து படங்களின் வேலைகளை மும்மரமாக பார்த்து வரும் ரவி மோகன்,ஏற்கனவே ஜூனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்,மேலும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிவகார்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார்,இது ஒரு புறம் இருக்க டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்,இப்படம் வடசென்னை கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் எந்த ஒரு அறிவிப்புமின்றி படத்தில் இருந்து விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக சாம் சி எஸ் இசையமைக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி