வலிகள் இல்லா வாழ்க்கை இல்ல – மனைவிக்கு ரவீந்தர் பதிவு!

Author: Shree
21 March 2023, 5:13 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.

இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். இந்நிலையில் தற்போது ரவீந்தர் மனைவி மகாலக்ஷ்மி குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், “வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை.. வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை.. என்னவள் வந்தால் அவள் விழி தந்தால்… என் முட்டாள்தனத்தை அவள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால், காதல் என்னில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவள் நிரூபித்தாள்.. நான் உணர்வுடன் இருக்க முயற்சிக்கிறேன். என பதிவிட்டு மனைவியின் காதலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி