‘பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா’.. விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய ரவீந்தர்..! அப்படி என்ன தான் இருக்கு இதுல..!
Author: Vignesh29 October 2022, 5:15 pm
தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்தது.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் குறித்த ட்ரோல் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புதுமண தம்பதியினர் ஜோடியாக யூடிப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியர் புதிய MG Gloster ரக காரை வாங்கியுள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து “வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா… அது பெரிய அதிர்ஷ்டம்.
அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா.. என பதிவிட்டுள்ளார்.
இந்த MG Gloster காரின் விலை 32 லட்சம் ரூபாய் முதல் 42 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 2000 சிசி இன்ஜின் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிசன் கொண்ட இந்த கார் ஒரு லிட்டர் டீசலுக்கு 13 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது. 6 முதல் 7 நபர்கள் வரை பயணம் செய்யும் வசதி கொண்டது.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.