பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக நடிகை சாச்சனா போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
முதல் நாமினேசன் என்ற பெயரில் நிகழ்ச்சி துவங்கி ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில் போட்டியாளர்களில் பலபேர் ஒருவருக்கொருவர் பழக்கம் இல்லாத நிலையில் அவர்களின் விளையாட்டை தெரியாமல் எபிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.
இதனால் முதல் நாளே பரபரப்பை ஏகற வைத்தது. அதிலும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்படுவதை நேற்றைய எபிசோடில் பெரும் ரகளையாக அமைந்தது. ஒவ்வொருவரும் தன்னை நாமினேட் செய்ய வேண்டாம் என வாக்குவாதத்தில் பதற்றத்துடன் ஈடுபட்டனர்.
அதன் பின் அதிக நாமினேஷன் ஓட்டுகளை பெற்ற நடிகை சாக்ஷனா எவிட் செய்யப்பட்டார். இவர் பிக் பாஸ் வரலாற்றிலேயே 24 மணி நேரத்தில் எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் சொகுசு அறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பெண் போட்டியாளர்கள் கேட்டுக்கொண்ட போது ஆண்களும் அதே அறைகளை வேண்டும் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
அதன் பிறகு பெண்களுக்கு சொகு அறைகளை ஒதுக்க வேண்டுமென்றால் ஒரு வாரம் ஆண்கள் யாரையும் பெண்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யக்கூடாது என ஆண்கள் தரப்பினர் கண்டிஷனை முன் வைத்தனர். ஆனால், நடிகை தர்ஷனா மற்றும் ஜாக்லின் ஆகிய இருவரும் இந்த கண்டிஷனுக்கு உடன்படவில்லை .
இதற்கு சாச்சனா முதல் ஆளாக இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்னார். மேலும் ஆண்கள் சொன்னது போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்களுக்குள் தான் நாமினேஷன் செய்ய வேண்டி இருக்கும். அதிலும் இந்த முடிவை எடுத்தது நாம நாலு பேரும்தான்.
அதனால் நீங்க என்னை நாமினேஷன் செய்தால் நான் தாராளமாக வீட்டில் இருந்து வெளியே போகிறேன் என வாய் விட்டு மாட்டிக்கொண்டார் நடிகை சாச்சனா. இதனால் அவர் முதல் நாளிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். சாச்சனா வெளியேறியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி justice for sachana வருகிறார்கள்.
மேலும் வாய்ப்பு கொடுத்த முதல் நாளே வீட்ட விட்டு அனுப்புவதற்கு எதுக்குடா வாய்ப்பு கொடுக்குறீங்க பாவம் அந்த சின்ன புள்ள மனுச எப்படி கஷ்டப்படுத்திட்டீங்களே என்றெல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: ரொம்ப நல்லவ மாதிரி நடித்த சாச்சனா… நீ இதுக்கு தான் வந்தியா? திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சாச்சனா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அடுத்த நபராக பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக வெளியேற போகும் நபர் ரவீந்தர் தான் என கூறப்பட்ட வருகிறது. பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று இதோ அந்த வீடியோ:
Fatman Health Issue…
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 8, 2024
Viraivil apo next Eviction Irukalam.#BiggBossTamil
pic.twitter.com/xd0vVUAkZN