காசு கேட்டதுக்கு அம்மா கிட்ட அப்படி பேசிட்டார்.. ராஜ்கிரன் குறித்து உண்மையை உடைத்த ரவீந்தர்..!

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார்.

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை அதிரடியாக கைது செய்து அண்மையில் இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.

தற்போது தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரவீந்தர் படத்தினை எடுப்பதற்காக பைனான்சியருடன் பணம் வாங்கி கடனில் கஷ்டப்பட்டது உண்மைதான் என்றும், அப்படி ஒரு படத்தில் ராஜ்கிரண் நடிக்க அட்வான்ஸ் தொகையாக 50 லட்சங்களை கொடுத்தேன்.

தற்போது, இந்த பிரச்சனையில் பணம் தேவைப்பட்டதால் ராஜ்கிரனுக்கு மெசேஜ் அனுப்பிய கேட்டேன். ஆனால், ராஜ்கிரண் பணத்தை என்னிடம் கொடுக்கவில்லை. அவர் என் அம்மாவிற்கு மெசேஜ் செய்திருக்கிறார். அதில், என்னால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், ஜனவரி மாதத்தில் 50 லட்சத்தை கொடுத்து விடுகிறேன் என்று மெசேஜ் செய்திருக்கிறார். நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது கொடுத்து உதவலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

31 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

49 minutes ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

2 hours ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

2 hours ago

This website uses cookies.