ரசிகர்களை ஹேப்பியாக்க அந்த காட்சியில் நடிக்க தயார் .. நடிகை ராஷிகண்ணா ஒப்பன் டாக்..!

Author: Rajesh
26 April 2022, 5:46 pm

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராஷிகண்ணா. மெட்ராஸ் கபே என்ற இந்திப்படம் மூலமாக ராஷிகண்ணா திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பெரிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில் நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளை போன்றுதான் முத்தக்காட்சிகளும். நடிக்க வந்த பிறகு முத்தக்காட்சி என்ன? படுக்கையறை காட்சி என்ன? அனைத்து காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்குவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் இளம் வயதிலே காதல் தோல்வியை சந்தித்துவிட்டேன். இதனால், நான் துவண்டுவிடவில்லை. காதலை வெறுக்கவும் இல்லை. மீண்டும் காதலிப்பேன். நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். பிரபல நடிகையான ராஷி கண்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!