அட பப்ளிசிட்டி பைத்தியமே.. மீனாவை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி.. சர்ச்சை கிளப்பிய யூடியூபர்..!
Author: Vignesh30 March 2024, 3:06 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர்.
மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாவிடம் இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த, மீனா கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவு என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு ஹீரோயின் தனியாய் இருந்தாலே பல வதந்திகள் தொடர்ந்து வரும் அந்த மாதிரியான வதந்திகள் என்னையும், குடும்பத்தையும் மிகவும் பாதித்து வருகிறது. தற்போது, வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழ்நிலையில், மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான் என்று மீனா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ஆராத் என்கின்ற திரைப்படத்தின் சர்ச்சையான விமர்சனத்தால் பிரபலமான சந்தோஷ் வர்கீ. இவர் தற்போது நடிகை மீனா அவர்களை திருமணம் செய்து கொள்ள தயார், அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தனக்கு தெரியும். இருப்பினும், அதைப் பற்றி தனக்கு கவலை இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக, நித்யா மேனன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆசனையும் தன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக இவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
மேலும், வீண் விளம்பரத்துக்காக நடிகை மீனாவை பற்றி பேசி புயலை கிளப்பியது ஏன்? எனவும், இதைப் பார்த்த நெட்டிசன்கள் , இவரின் இந்த வீடியோவை பார்த்த பிறகு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். பப்ளிசிட்டிக்காக இவ்வளவு மலிவாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.