அனுஷ்காவுடன் BreakUp.. அந்த மாதிரி பழக்கத்தால் 40 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபாஸ்..!
Author: Vignesh12 June 2024, 6:35 pm
தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.
மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த அந்த திரைப்படமும் அட்டர் பிளாப் ஆனது.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
மேலும் படிக்க: அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!
அடுத்ததாக சலார் படத்தில் நடித்து வெற்றியை ருசித்த பிரபாஸ் அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் சமீப காலமாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் குறித்து இயக்குனர் ராஜமௌலி ஒரு விஷயத்தை பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார். அதில், அவர் பிரபாஸ் அடிப்படையில் ஒரு முழு சோம்பேறி திருமணம் செய்யாததற்கு அவருடைய சோம்பேறித்தனம் தான் காரணமாகும். இந்த விஷயம், தான் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.