விஜய்யை சந்தோஷப்படுத்த ரஜினியை அசிங்கப்படுத்திய கூலிப்படை .. வெளுத்து வாங்கிய பிரபலம்..!

Author: Vignesh
6 January 2024, 6:20 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், இந்த வயதிலும் நம்பர் ஒன் என்ற நாற்காலியை விட்டு நகராமல் ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார். ரஜினி இந்த இடத்தில் இருப்பது யாருக்கு கோபமோ விஜய் ரசிகர்களுக்கு செம கோபம் போல, தினமும் ரஜினி பற்றி ஒரு வீடியோவை வெட்டி ஒட்டி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ரம்பா அவர்கள் கொடுத்த பேட்டியில் ரஜினி சார் படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பார். எல்லோரிடமும் வம்பிழுப்பார், அப்படித்தான் ஒரு முறை இருட்டில் என் முதுகில் தட்டி என்னை அலற வைத்தார். பிறகு ஜாலியாக பேசி சிரித்தோம் என்று கூறியிருந்தார். ஆனால், விஜய் ரசிகர்கள் பலரும் அதை ஏதோ ரம்பாவிற்கு ரஜினி தொல்லை கொடுத்தது போல் சித்தரித்து ட்ரெண்ட் செய்து விட்டனர். இதை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கடுமையாக எச்சரித்ததோடு விஜய் உடைய கூலிப்படை அதாவது ஐடி லிங்க் தான் ரஜினி மீது வெறுப்பால் இப்படி செய்திருக்கிறார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!
  • Close menu