இன்சல்ட் பண்ற.. நடிகையால் கடுப்பாகி சினிமாவை விட்டு விலகிய சிவகுமார்..!
Author: Vignesh4 December 2023, 12:13 pm
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சினிமா பிரபலங்கள் குறித்து பேட்டியில் பல விஷயங்களை youtube பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது, நடிகர் சிவக்குமார் சினிமாவில் இருந்து எதற்காக விலகினார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது, ஒரு நாள் சிவக்குமார் சீரியல் ஒன்றில் நடித்து வந்த போது ஷாட்டில் உணர்ச்சிவசமாக ஒரு டயலாக்கை பேசிக்கொண்டு இருந்தாராம். அப்போது, அதே சீரியலில் நடித்த ஒரு துணை நடிகை சத்தமாக ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தாராம். இது சிவக்குமாருக்கு மிகவும் இடையூறாக இருந்துள்ளது.
இதனால், அவர் என்னமா நான் இங்க டயலாக் பேசிட்டு இருக்கேன் நீ இப்படி சத்தமாக பேசிட்டு இருக்க என்று முகத்திற்கு நேராகவே கேட்டுவிட்டாராம். அதற்கு அந்த துணை நடிகை என்ன சார் இப்படி பண்றீங்க.. இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க.. இது கூட தெரியாதா? எப்படியும் டப்பிங் பேச போறீங்க, டப்பிங்கில் பாத்துக்கோங்க.. என்று நக்கலாக பதில் சொல்லி மீண்டும் சத்தமாக போனில் பேசியுள்ளார்.

இதனால், கோபமடைந்த சிவக்குமார் அன்றைய சினிமா எப்படி இருந்தது. இன்றைய சினிமா எப்படி இருக்கிறது என்று யோசித்து சிவக்குமார் சீரியலில் நடிக்க கூடாது என்று முடிவு செய்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.