விஜய் வீட்டு பஞ்சாயத்து… தாய், தந்தையை பிரித்தது இவர்தானாம்….? கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த மனைவி..!

Author: Vignesh
14 January 2023, 11:28 am

நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சிக்கும் இடையே சில பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளங்களின் மூலம், நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை அனைவருக்கும் தெரியவந்தது.

இதனால் தளபதி விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எதற்காக விஜய் தனது தாய், தந்தையிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும், விஜய் – எஸ்.ஏ.சி இவர்கள் இருவருக்கும் பிரிவு வர என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

SAChandrashekar_ActorVijay_updatenews360

இதனிடையே, இதுகுறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளி வந்து இருக்கிறது. அதன்படி, விஜய் தனது தாய், தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதற்கு அவருடைய மனைவி சங்கீதா தான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக துப்பாக்கி படம் வரை தந்தை எஸ்.ஏ.சி தான் விஜய்யின் அனைத்து விஷயங்களையும் கவனித்து கொண்டதாகவும், படத்தின் கதை கேட்பது, படத்திற்கான சம்பளம் பேசுவது, பேசிய சம்பளத்தை அவரே வாங்கி கொள்வது என்று இருந்ததாக பேசப்பட்டு வந்தது.

Vijay SAngeetha - Updatenews360

ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு இதில் உடன் பாடு இல்லாதநிலையில் மனக்கசப்பு ஏற்பட்டு, ஏன் இதையெல்லாம் நீங்களே கவனித்து கொள்ளலாமே என்று விஜய்யிடம் கூறியதாக தெரிகிறது. இதன்பின் எஸ்.ஏ.சி கவனித்து வந்த அனைத்து விஷயங்களையும் விஜய் கவனித்து கொள்ள துவங்கியதால், எஸ்.ஏ.சி வைத்திருத்த ஆட்களை எல்லாம் தூக்கிவிட்டு புதிய ஆட்களை விஜய் வேலைக்கு சேர்த்தாராம்.

vijay - updatenews360 4

இதனால் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பிரச்சனை பூதாகரமான வெடித்துள்ளது. இதன்பின் தான் விஜய் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வீடு கட்டி சென்றுவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 682

    2

    2