மது போதையில் பிரபல நடிகையிடம் எல்லைமீறிய ஜெய்?.. காதல் முறிவுக்கு இது தான் காரணமாம்..!
Author: Vignesh1 April 2023, 8:30 pm
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களில் நிஜத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, நயன்தாரா-விக்னேஷ் சிவன், சினேகா-பிரசன்னா, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா என இப்படி பிரபலங்களை கூறலாம்.
இந்த லிஸ்டில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்டது. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துவந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இப்போது என்னவென்றால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என செய்திகள் வெளியானது.
இதனிடையே, அஞ்சலி ஜெய்யுடன் பிரேக் அப் செய்து கொண்டதற்கு நடிகர் ஜெய் தான் காரணமாம். இவர் அதிக மது அருந்துவாராம் இந்த பழக்கம் வழக்கம் அஞ்சலிக்கு பிடிக்கவில்லையாம்.

இது தான் அவர்களின் காதல் முறிவுக்கு காரணம் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தற்போது இருவரும் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை அஞ்சலி நடித்திருக்கும் கூடிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு இவருடைய திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.