ஐஷு வாழ்க்கைய சீரழிச்சவன் தானே நீ?.. பிக்பாஸ் போட்டியாளரை கடுமையாக திட்டிய பிரதீப்..!

Author: Vignesh
6 November 2023, 2:47 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், இதற்கிடையில், சனிக்கிழமை நிகழ்ச்சியில் பிரதீப் மீது போட்டியாளர்கள் புகாரளித்திருந்த நிலையில், நிக்‌ஷனை பார்த்து பிரதீப், ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? என்று கூறி அசிங்கப்படுத்தினார். ஆனால் பிரதீப் எதற்கு இதை கூறினார் என்று யாருக்கும் புதிராக இருந்தது. இந்நிலையில் ஐஸு – நிக்‌ஷன் காதல் ரூட்டினை பார்த்த ஐஸுவின் குடும்பத்தினர், பிக்பாஸ் வீட்டிற்கே சென்றுள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

முத்த விவகாரத்தில் பெற்றோர்கள் வருத்தத்தில் இருந்ததால் இரு தினங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டிற்கு சென்று, கண்ணாடி வழியே அவங்க ரெண்டு பேரும் சோகத்தில் இருந்ததாகவும், குடும்ப மானம் போகுது. இனிமேல் ஒருநாள் கூட இந்த நிகழ்ச்சியில் என் பொண்ணு இருக்க வேண்டாம். தயவு செய்து வெளியில் அனுப்பிடுங்கன்னு நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் அழுதுள்ளார்களாம். இந்த விசயத்தால் தான் பிரதீப், நிக்‌ஷனை திட்டியதாக இணையத்தில் பலர் கூறி வருகிறார்கள்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!