இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
Author: Prasad25 April 2025, 7:45 pm
ரவீனா தாஹா
2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரவீனா தாஹா. அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்த இவர், விஜய் தொலைக்காட்சியின் “மௌன ராகம் 2” தொடரின் மூலம் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி சீசன் 4” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய ரவீனா, “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதனை தொடர்ந்து “ஜோடி ஆர் யு ரெடி” நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் ரன்னர் அப் ஆக வந்தார்.
இவர் சீரீயல்கள் மட்டுமல்லாது, “பூஜை”, “ஜில்லா”, “ராட்சசன்” போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ரவீனா தாஹாக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
ஒத்துழைப்பு தரவில்லை…
அதாவது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட “சிந்து பைரவி” தொடரில் தன்னை முன்னணி கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்துவிட்டு இரண்டாவது கதாநாயகிக்கான வாய்ப்புதான் வழங்கப்பட்டதாக கூறி ரவீனா தாஹா அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாராம்.

ஆனால் அந்த சீரியலில் இருந்து ரவீனா தாஹா கூறிய அக்காரணம் சரியானது அல்ல என்று புகார் எழுந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கமும் தொலைக்காட்சி நடிகர் சங்கமும் ரவீனாவுக்கு ஒரு வருடம் நடிக்க தடை போட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
