அவசர அவசரமாக நடந்த கல்யாணம்.. ரெடின் கிங்ஸ்லியின் திடீர் முடிவுக்கு இதான் காரணம்..!

Author: Vignesh
13 December 2023, 8:29 am

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ். ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Redin Kingsley - updatenews360

மேலும் சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர் .

Redin Kingsley - updatenews360

இவரைப் பற்றி பயில்வான் ரங்கநாதரன் ஒரு பேட்டியில் பேசுகையில், அதில், ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பெரிய மூளைக்காரன். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார்.

Redin Kingsley - updatenews360

இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதரன் தெரிவித்திருந்தார்.

Redin Kingsley - updatenews360

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று இவர் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தை நடிகர் சதீஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு திருமண வாழ்த்துக்களுடன் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையில் இவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் ஷூட்டிங் செட்டில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், உண்மையாக இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். ரெடின் கிங்ஸ்லியின் திருமணம் அவசரம் அவசரமாக முடிக்க என்ன காரணம் என்று கேள்வி எழுந்தது.

redin kingsley

அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், எத்தனை நாள் திருமணத்தை தள்ளிப்போடுவீர்கள் என சங்கீதா கேட்டதால்தான் ரெடின் கிங்ஸ்லி ஒப்புக்கொண்டதாகவும், மேலும் பெரிய அளவில் திருமணம் செய்தால் பல பிரபலங்களை அழைக்க நேரும், செலவு ஏற்படும் என்பதற்காக இருக்கலாம் என்று இணையதளத்தில் கூறி வருகிறார்கள். மேலும், இந்த திருமணத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக்காகி மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!