Titanic Jack ஸ்டைலில் மாறி உச்ச கட்ட ரொமான்ஸ்.. ரெடின் கிங்ஸ்லி – சங்கீதாவின் வைரல் போட்டோஸ்..!

Author: Vignesh
3 January 2024, 9:59 am

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

redin kingsley

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.

redin kingsley

இந்நிலையில், சமீபத்தில் கூட கணவரின் பிறந்தநாளுக்கு சங்கீதா இரவு பார்ட்டி ஒன்றை கொடுத்திருந்தார். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு காதல் மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி பரிசு வழங்கி வெளியில் கூட்டி சென்றுள்ளார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சங்கீதா தற்போது, இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், நியூ இயர் ஸ்பெஷலாக ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியினர் ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் டைட்டானிக் ஜாக் போல் போஸ் கொடுத்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி இருவருமே செம ஸ்டைலிஷ் ஆக உள்ளனர். இருவருமே வெரைட்டி வெரைட்டியாக போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளனர். படத்தில் காமெடியனாக இருந்தாலும், மனைவி உடன் இருக்கும் போது ஹாலிவுட் ஹீரோ ஸ்டைலில் கெட்டப்பை மாற்றி ரெடின் கிங்ஸ்லி மாஸ் காட்டி வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…