வடிவேலுவை தொடர்ந்து பிரபல காமெடி நடிகருக்கு ரெட் கார்ட் ஆ? வளர்ந்து வரும் போது இது தேவையா..? நெட்டிசன்கள் ஷாக்..!
Author: Vignesh13 February 2023, 11:30 am
தமிழ் சினிமாவில் ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி காமெடி நடிகராக திரையுலகின் உள்ளே என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே, அஜித் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் டான்சராக நடித்து இருந்தார்.

பின்னர், சென்னை மற்றும் பெங்களூருவில் அரசு கண்காட்சிகளுக்கு ஒரு நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து வந்த ரெடின் கிங்ஸ்லி. பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் ஏற்பட்ட நட்பு தான், இவர் திரையுலகில் காமெடி நடிகராக மாறுவதற்கு வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு, இயக்கிய படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்த நிலையில், அந்த படம் வெளியாகவில்லை. 2018 ஆம் ஆண்டு இதையடுத்து, நயன்தாராவை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தார். இவரின் வித்தியாசமான பேச்சு வழக்கு, உடல்மொழி போன்றவை வெகு விரைவாகவே ரசிகர்கள் மத்தியில் ரெடின் கிங்ஸ்லி பிரபலமடைய செய்தது.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி , சொன்னபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்கு தற்போது தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் தயாரிப்பாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது, நடிகர் ரெடின் கிங்ஸ்லியாழ் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், ‘லெக் பீஸ்’ படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அந்த தொகையை மீட்டு தரும்படியும் அதுவரை அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் நடித்து கொடுப்பதாக வடிவேலு கூறிய அதில் இருந்து பின் வாங்கியதற்காகவும், வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் நடிக்க தடை போட்ட நிலையில், தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் இந்த நிலை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் கொடுத்த புகாரால் ரெடினுக்கு ரெட் கார்ட் விழும் அபாயாம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.