வாய்ப்பு கிடைத்தும் விஜய்யுடன் நடிக்க மறுப்பு : அந்த நடிகரே வேண்டாம் என ஒதுக்கிய பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 10:14 am

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய்யுடன் போட்டி போட்டு ஒரு படத்திலாது நடிக்க வேண்டும் என நடிகைகள் தவம் கிடக்கின்றனர்.

ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அஜித், விஜய்யுடன் நடிக்க முடியாது என மறுத்துள்ளார் பிரபல நடிகை…

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.

அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியான நடிகையாகினார். அவரின் நடிப்பும், நடனமும் இளைஞர்களை கட்டிப் போட்டது.

தமிழில் பெரியதாக அவருக்கு படம் ஹிட் ஆகவில்லை என்றாலும், தெலுங்கில் மாஸ் நடிகையாக வலம் வருகிறார்.

சாய் பல்லவியுடன் நடிக்க நடிகர்களும் போட்டி போட்டு வரும் நிலையில், அஜித், விஜய் படங்களை வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

ஒரு மேடையில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று கூறிவிட்டு விஜய் பட வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து அவமானப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி.

முக்கியமான ஒரு படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், துணிவு படத்தில் அஜித்துடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதற்கு சாய்பல்லவி, பெரிய நடிகர்களின் படத்தில் நடித்தால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என்றும் அரைகுறை ஆடையணிந்து பாட்டுக்கு ஆடச்சொல்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இதை கேட்ட அஜித், விஜய் ரசிகர்கள் சாய்பல்லவியை கிண்டல் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?