தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.
அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ரெஜினா அண்மையில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
நான் படவாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரம் அது. சிலபேரிடம் வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டேன். அதன் மூலம் ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொன்னால் அடுத்த வேலையை பார்க்கலாம் என சொன்னார். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது எனக்கு சரியான புரிதல் இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட என்னவென்று தெரியாது.
நான் நினைத்தேன்… சம்பள விஷயத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று, அதனால், சரி ஓகே இதை பற்றி என் மேனேஜர் உங்களிடம் பேசுவார் என சொல்லிவிட்டு போன் கட் பண்ணிட்டேன். அதன் பின்னர் தான் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நான் முடியாது என சொல்லுவேன்.
இது போன்று எனக்கு மட்டும் இல்லை. சினிமாவில் பல பெண்களுக்கு இதே போல் நடக்கிறது. சில பேர் சும்மாவே கதை விடுகிறார்கள். உண்மையில் நடந்திருக்கலாம்… நடக்காமல் கூட பொய் சொல்லலாம். உண்மை என்னவென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும் என ரெஜினா வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் நடிகைகள் குத்துவிட்டு செய்யும் தவறுகள் படுக்கையை பகிர்வது குறித்து ஒரு நடிகையாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, ஆம்ம், நடிகைகள் குடித்துவிட்டு கூத்தடிக்கிறார்கள். பார்ட்டி, பப் உள்ளிட்டவற்றில் அவர்களது வேறு முகத்தை பார்க்க முடிகிறது. நடிகைகள் குடித்துவிட்டு தங்களுக்கு பிடித்த ஆண்கள் மற்றும் பாய் பிரண்டுடன் படுக்கையை பகிர்கிறார்கள் இதெல்லாம் நடக்கிறது தான் ஆனால், அதற்காக அவள் எல்லா ஆண்களுடன் படுக்கவேண்டும் என கட்டாயம் இல்லை, நீ அவனுடன் அப்படி இருந்தியே என் கூடவும் படுக்க வா என அழைப்பது அபத்தத்தின் உச்சம். உங்களை பிடிப்பதும், பிடிக்காமல் போவதும் அவரவர் தனிப்பட்ட உரிமம். அதற்காக ஒரு நடிகையின் கேரக்டரை மோசமாக சித்தரித்து எழுதுவது என்பது அத்துமீறல், தவறான விஷயம் என பேசியுள்ளார்.
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…
ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
This website uses cookies.