ஐயோ பாவம்…. நடிகை ரெஜினா கசாண்ட்ரா சொத்து மதிப்பு கேட்டு பரிதாபப்படும் ரசிகர்கள்!

Author: Rajesh
13 December 2023, 11:00 am

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார்.

regina cassandra

அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

Regina Cassandra - updatenews360

அதன் பிறகு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

அதனால் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஓரினசேர்க்கையாளராக நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில் ரெஜினாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு படத்திற்கு 80 லட்சத்தை சம்பளமாக வாங்கும் ரெஜினா ரூ 6 கோடி மட்டுமே சொத்து வைத்துள்ளாராம். ஒரு நடிகைக்கு இவ்வளவு கம்மியான சொத்தா? என சிலர் ஷாக்காகி விட்டனர். அவரிடம் ரேஞ்ச் ரோவர், எவோக், மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்கள் இருப்பது குறிப்பித்தக்கது. நடிகை ரெஜினா இன்று தனது 33வது பிறந்தாள் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 705

    0

    0