ஆபாசம் உடையில் இல்ல… பார்வையில் தான் – சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து விமர்சனத்திற்கு ஆளான ரேகா நாயர்!
Author: Rajesh29 January 2024, 7:25 pm
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்தவகையில் தற்போது, பல பிரச்சனைகள் ஆபாசமான ஆடையால் தான் நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், ஆபாசம் என்பது ஆடையில் இல்லை உங்கள் பார்வையால் தான் உள்ளது என ரேகா நாயர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.