பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில், அரைகுறை ஆடையுடன் பொதுவெளியில் அலையும் பெண்கள் குறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடுப்பு தெரிவது போல் ஆடை அணிந்து கொண்டு சென்றால் ஆண்கள் கை வைக்க தான் செய்வார்கள் அதற்கு ஏன் கோவப்பட வேண்டும் என்றும், அதை அனுபவித்துவிட்டு போக வேண்டியது தானே என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், உடல் தெரியும் படி ஆடை அணிவது உன்னுடைய சுதந்திரம் என்றால் ஆண்கள் அதை ரசிக்கும் போது எதற்காக உங்களுக்கு கோபம் வருகிறது.
தனக்கு ஸ்டைலாக உடை அணிவது பிடிக்கும் என்பதால் தான் தன்னை ஒரு சிலை போலவே உணர்வதாகவும், அப்படித்தான் தனக்கு பிடித்த மாதிரியான உடை அணியும் போது மற்றவர்கள் பாராட்டினால் சந்தோஷப்படுவதாகவும், அதுவே ஒரு ஆண் பாராட்டினால் எதற்காக நீங்கள் கோபப்பட வேண்டும் என்றும், எந்த இடத்தில் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
அதை விட்டுவிட்டு ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு பஸ், மால் போன்ற இடங்களுக்கு இளம் பெண்கள் செல்வதால் அப்போது அதை பார்க்கக்கூடிய ஆண்கள் அதை ஏன் குற்றமாக சொல்ல வேண்டும் எனவும், காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆண்கள் இடுப்பில் கை வச்சா அனுபவிக்கனும்னு ரேகா நாயர் சொன்னதாக தவறாக புரிந்துக்கொண்டு பரப்பிவிட்டார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ரேகா நாயர், ” யூடியூப்களின் அயோக்கியத்தனம் உச்சமாக இருக்கிறது நான் பேசுவதை அனைத்தையும் போடுங்கள் பிட்டு பிட்டா போட்டு கேவலமா காசு சம்பாதிக்காதீங்க. “ஒருவன் ஒரு பெண்ணை ஆசையில் தொடுவதற்கு, பிடித்து ரசித்து தொடுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக தான் நான் அப்படி சொன்னேன்.
தெரியாத ஆண் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ உன்னை தொடும் போது அதை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று கூறவில்லை. சேலை அணிந்திருக்கும் போது தவறாக நடந்தால் கோழி கழுத்தை திருவுவது போல் அவனை திருகி போடலாம். ஆடையை தவறாக அணிவீர்கள் ஆண்களை குற்றம் சொல்வீர்கள். இதை சொன்னால் என்னை பூமர் ஆண்ட்டி என்று கூறுவீர்கள்.
சேலை மார்பில் இருந்து விலகினாலோ இடுப்பு தெரிந்தாலோ அதன் பாதுகாப்பான மனநிலையில் இருந்தால் தான் பேருந்தில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வேறு எதிலாவது செல்லவேண்டும். இடுப்பில் கை வைத்துவிட்ட்டால் தற்கொலை செய்ய கூடாது. பார்வையிலே ஒருவன் எந்தமாதிரி பார்க்கிறான் என்பது தெரியும். நன்றாக இருகிறது என்றால் ஏற்றுக்கொள். இல்லை என்றால் மாற்ற முடிந்தால் மாற்று இல்லாட்டி அனுபவித்துக்கொள் என்று சொன்னது இப்படி மாறிவிட்டதாக ரேகா நாயர் தெரிவித்திருக்கிறார். இதுவே மழுப்பலான பதில் தான் என மீண்டும் அவரை விமர்சித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.