ஏண்டி என்ன அப்பவே பாக்கல… நீ செமயான ஹீரோயின் மெட்டிரியல்: ரேகா நாயரிடம் வழிந்த இயக்குனர் ..!

Author: Vignesh
10 May 2023, 1:50 pm

இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி பயில்வான் ரங்கநாதன் கொச்சையாக விமர்சனம் செய்து இருந்தார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகை ரேகா, வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வானை மடக்கிப் பிடித்து அடிக்க பாய்ந்தார்.

இதனால் மிரண்டு போன பயில்வான் விட்டால் போதும் என, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இவர்களுக்கிடையேயானா இந்த மோதலை தொடந்து, ரேகா நாயர் ஒரு பேட்டியில் பயில்வானை வெளுத்து வாங்கினார்.

பேட்டி ஒன்றில், தனக்கு உண்மையான தீபாவளி பயில்வான் என்றைக்கு சாகுறாரோ, அன்னைக்கு தான் என்றும், என்ன பத்தி எவ்ளோ கேவலமா பேசிட்டாரு, அந்த ஆளுக்கு இப்படி பேசுவதால் என்ன கிடைக்கிறது என விளாசியுள்ளார். மேலும் அவர் தனக்கு அந்த ஆள பார்த்தாலே, அவ்வளவு காண்டாகுது என்றும், தயவு செய்து இதுக்கு மேல இந்த ஆள பத்தி கேக்காதீங்க அப்புறம் பச்சையா ஏதாவது சொல்லிடுவேன் என தனது மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.

இதன்பின் ரேகா நாயர் பல பேட்டிகளில் கலந்து கொண்டார். அதில், இயக்குனர் பாரதிராஜா தன்னை புகழ்ந்து பேசியதை பற்றியும் பகிர்ந்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவை எப்பவாவது பார்த்து பேசுவேன் என்றும், அப்படி தன்னிடம் பேசும் போது ஏண்டி நான்லாம் படம் எடுக்கும் போது நீ இல்ல என்றும், அப்பெல்லாம் நீ ஏன் என்ன வந்து பாக்கல எனவும், நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-ன்னு கூறுவார் என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசுகையில், பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர் என்ற முன்னணி இயக்குனர்கள் காலக்கட்டத்தில் தனக்கு 20 அல்லது 25 வயது இருந்திருந்தால் நிச்சயம் நான் ஹீரோயின் ஆகியிருப்பேன் என்று வெளிப்படையாக ரேகா நாயர் பேசியுள்ளார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!