பட பட்ஜெட் 6 கோடி..ஆனால் வசூல் 50 கோடி…தியேட்டரில் மாஸ் காட்டும் மலையாள படம்…!

Author: Selvan
27 January 2025, 7:55 pm

ரேகாசித்திரம் பாக்ஸ் ஆபீஸ்

மலையாள சினிமா எப்போதும் எதார்த்தமான கதை அம்சத்தை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து அதிக லாபத்தை ஈட்டி வருவார்கள்,அந்த வகையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆசிப் அலி நடிப்பில் வெளியான ரேகாசித்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

Aasif Ali crime thriller movie

கடந்த 2021 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த THE PREIST மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஜோபின் டி சாக்கோ தன்னுடைய இரண்டாவது படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்,இப்படத்திலும் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் அருணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதா…அப்போ அர்ச்சனா வாழ்க்கை…குழப்பத்தில் ரசிகர்கள்…!

கிரைம்,திரில்லர் பாணியில் படம் முழுக்க ட்விஸ்ட் வைத்து இப்படத்தை கச்சிதமாக இயக்குனர் குறைந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவதால் தற்போது வரை 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆசிப் அலி நடிப்பில் குறைந்த செலவில் உருவான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படமும் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.தற்போது மீண்டும் ரேகாசித்திரம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருவதால்,ஆசிப் அலி மார்க்கெட் மலையாள சினிமாவில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?