சினேகா, ஜோதிகா-லாம் இப்படியா இருக்காங்க.. வெளியே தலைகாட்டவே முடியல.. நயன்தாராவை அசிங்கப்படுத்திய குடும்ப நபர்..!
Author: Vignesh13 October 2022, 2:45 pm
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இந்நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றதும், கேரளாவில் உள்ள நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பெரியப்பா பெரியம்மாவை திருமணத்திற்கு அழைக்காத செய்தி முன்பே வைரலானது. விக்னேஷ் சிவனின் தந்தை இறந்த பிறகு, அவருடைய அம்மாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இப்படி திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை என்று பெரியப்பா அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
தற்போது இரட்டை குழந்தைகள் விவகாரம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக விக்னேஷ் சிவன், பெரியப்பா பெரியம்மா பேட்டியில் நயன்தாராவை விமர்சித்து பேசியுள்ளனர். திருமணத்திற்கு கூப்பிடாது ஒரு பக்கம் இருந்தாலும் நயன் தாராவுடன் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது தப்பென்று பிரபல தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் சினேகா, ஜோதிகா கூட திருமணம் செய்து கொண்டார்கள் அவர்கள் எப்படி ஒழுக்கமாக அடக்கவுடக்கமான பெண் போல் நடந்து கொள்கிறார்கள் என்று நயன் தாராவை விமர்சித்தனர். வெளியே தலைகாட்டவே முடியவில்லை என்றும் எல்லோரும் இதைப்பற்றியே பேசிவருவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் என்னதான் நயன்தாரா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் இந்த விசயம் தவறு என்றும், காசு இருக்கும் எண்ணத்தில் பணத்தை வைத்து எதையும் சாதித்து கொள்ளும் இவ்வாறான எண்ணங்கள் தவறு என்றும் கூறியுள்ளனர்.