மதம்… சாதி… சந்திக்காத மனிதர்களையும் வெறுக்க வைக்கும் – வைரலாகும் அஜித் வீடியோ!

Author:
5 October 2024, 4:26 pm

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் இருந்து வரும் நடிகர் அஜித் தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு திரைப்பட விழாக்களிலோ, ரசிகர்களை சந்திப்பதிலோ, படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் இப்படி எதிலுமே கலந்து கொள்ள மாட்டார் .

ajith

அதில் அவருக்கு விருப்பமும் கிடையாது. பல ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகளை அவர் அறவே தவிர்த்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு சரி வெற்றி படங்களை கொடுப்பதோடு சரி அதன் பிறகு அவர் பாட்டுக்கு அவர் வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்.

குறிப்பாக நடிப்பை தாண்டி அஜித்திற்கு கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதனால் அவர் அடிக்கடி பயணங்கள் செல்வதை தன்னுடைய லட்சியமாகவும் தன்னுடைய மனதிற்கு பிடித்த காரியம் ஆகவும் செய்து வருகிறார்.

ajith-updatenews360

அந்த வகையில் அஜித் ஒரு பயணத்தின் போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பயணத்தின் போது அஜித் பேசியுள்ள அந்த வீடியோவில் வெவ்வேறு நாடு, மத மொழி இன மக்களை நான் சந்தித்து இருக்கிறேன் .

இதையும் படியுங்கள்: என் கணவர் தான் என் SUCCESS’க்கு காரணம் – நடிகை சரண்யா பெருமிதம்!

இந்த பயணங்களின் போது அவர்களின் கலாச்சாரத்தை அனுபவித்ததுடன் அவர்களுடன் பேசி நெருக்கமாக பழகி இருக்கிறேன். சாதியும் மதமும் நீங்கள் பார்க்காத நபரின் மீது கூட வெறுப்பை ஏற்படுத்தும் என்று பேசி இருக்கிறார் அஜித். பல வருடங்களுக்கு பிறகு அஜித் மனம் திறந்து பேசி இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்கள் முழுக்க அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 219

    0

    0