ஐட்டம் டான்ஸ் ஆட 40 லட்சம்.. அந்தப் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கருக்கு சம்பளமே இவ்வளவு தானப்பா..!

Author: Vignesh
29 February 2024, 2:48 pm

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

sayesha-updatenews360

17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகி காப்பான் படத்தில் நடித்தும் இருந்தார் சாயிஷா.

sayesha-updatenews360

இதனிடையே, சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ‘காப்பான்’ ‘டெடி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் அடிக்கடி தங்களது லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

sayesha-updatenews360

இந்த நிலையில், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த ஐட்டம் பாடலுக்காக 40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியானது. புஷ்பா படத்தில் சமந்தா போட்ட ஐட்டம் ஆட்டத்திற்கு இணையாக கெளதம் கார்த்திக்கோடு சாயிஷா ஆடி இருந்தார்.

sayyeshaa priya bhavani shankar

இந்த ஐந்து நிமிட பாடலுக்கு இப்படி ஒரு பெருந்தொகையை அவர் பெற்றிருந்த நிலையில், 10 தல படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கேரக்டர் நடித்ததற்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமே எழுவது லட்சம் ரூபாய் தான் என்று கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பதற்கு 30 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இப்படி லட்சத்தில் சம்பளம் வாங்குவதால் தான் பிரியா பவானி சங்கர், ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகிறாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 228

    0

    0