உன் இஷ்டத்திற்கு என்ன வேணாலும் எழுதுவையா?.. பத்திரிக்கையாளரை வெளுத்தெடுத்த ஜெயலலிதா..!

Author: Vignesh
29 May 2023, 6:03 pm

நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் தைரியமான பெண்மணியாகவே இருந்து இருக்கிறார்.

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் சக நடிகரான ரவிச்சந்திரனை குறித்து கேள்வி எழுப்பியபோது, “ஒரு நாயகனுக்கான தோற்றம், நடனம் எல்லாம் சிறப்பாக அமையப்பெற்றவர் ரவிச்சந்திரன் என்றும், தன்னுடன் அவர் பல படங்களில் நடித்து இருந்தபோதும், முதல் திரைப்படத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும்போது இருந்த ஆர்வத்தை பின்னாள் வந்த எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை என்று மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்து உள்ளார்.

J.Jayalalitha -updatenews360

மேலும், ரவிச்சந்திரன் ஆர்வம் மட்டும் அப்படியே இருந்திருந்தால், அவர் இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்” எனவும், தனது கருத்தை கூறினாராம். இச்சம்பவம் அவரது தைரியமான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

J.Jayalalitha -updatenews360

இதனிடையே, ஜெயலலிதா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலக்கட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளர் தனது பத்திரிக்கையில் “ஜெயலலிதா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முருகனுக்கு விரதம் எடுப்பார் என்றும், செவ்வாய்க்கிழமை மதிய வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார் என பொய்யாக எழுதி பிரசுரித்து விட்டார். விரதம் எடுப்பது நல்ல விஷயம்தானே, ஆதலால் ஜெயலலிதா பெரிதாக கண்டுகொள்ள மாட்டார் எனவும், மேலும் கோபம்கொள்ளமாட்டார் என நினைத்து அதனை பத்திரிக்கையாளர் எழுதிவிட்டாராம்.

J.Jayalalitha -updatenews360

இந்த விஷயம் ஜெயலலிதாவிற்கு தெரியவந்த நிலையில், மிகுந்த கோபம் கொண்டு இருந்தாராம். படப்பிடிப்புத் தளத்தில் அந்த பத்திரிக்கையாளரை பார்த்து, ஜெயலலிதா அவரை தனியாக அழைத்து “நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு தான் செவ்வாய்க்கிழமை விரதம் எடுபேன் என எழுதிவிட்டீர்கள். என்றாவது செவ்வாய்க்கிழமை படப்பிடிப்புத் தளத்தில் உணவு உண்ண நேர்ந்தால், அதனை பார்க்கும் மக்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என கோபமாக கடிந்து கொண்டாராம்.

J.Jayalalitha -updatenews360

ஆதலால் தன்னை பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் தன்னிடம் முதலில் கேட்டுவிட்டு எழுதுங்கள்” என கோபமாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார் என நினைத்த பத்திரிக்கையாளருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 295

    0

    0