கோபிக்கு துரோகம் பண்ணிட்டியேம்மா? ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ரேஷ்மா – விளாசும் நெட்டிசன்ஸ்!
Author: Shree6 July 2023, 8:47 am
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் பின்னர் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். இதில் ராதிகாவாக நடித்து வரும் பிக்பாஸ் நடிகை ரேஷ்மா அந்த சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடையே மிகப்பெரிய இடத்தை பிடித்து பேமஸ் ஆகிவிட்டார்.
இப்படி ஒரு நிலையில் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல மாத இதழ் ஒன்றிற்கு மணப்பெண் கோலத்தில்ஆண் மாடல் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதை பார்த்த பலர் என்னமா ராதிகா கோபிக்கு துரோகம் பண்ணிட்டியேம்மா என ட்ரோல் செய்து தள்ளியுள்ளன