பந்தா காட்டும் ரெடின் கிங்ஸ்லி – தன் பாணியில் எச்சரிக்கை செய்த வடிவேல்..!

Author: Rajesh
7 February 2022, 6:42 pm

தமிழ் சினிமாவில் காமெடி கிங் வடிவேலு தற்போதுசுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பல காமெடி நடிகர்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், பெரும்பாலான காட்சிகளில் ரெடின் கிங்ஸ்லியுடன் நடிக்கும் காட்சிகள் இருக்கின்றது. இதனிடையே இருவருக்குமிடையேயான காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர். அதன்படி படிப்பிடிப்பு தளத்திற்கு வடிவேல் 2 மணி நேரத்திற்கு முன்னாடியே வந்துள்ளார். ஆனால் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 2 மணி நேரமாகியும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. மேலும் வடிவேலு ரெடின் கிங்ஸ்லி வரும் வரை பொறுத்திருந்து உள்ளார்.

பல மணி நேரம் கழித்து, ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததையடுத்து இயக்குனர், வடிவேலுவிடம் படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறியுள்ளார். அதற்கு வடிவேலு அதிக நேரம் ஆகிவிட்டது. தற்போது படப்பிடிப்பு தொடங்கினால் மற்ற கலைஞர்கள் சீக்கிரமாக செல்ல முடியாது. அதனால் பலருக்கும் காத்திருக்க வேண்டும். நாளைக்கு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என கூறிவிட்டு வடிவேலு சென்றுவிட்டாராம்.

இதனிடையே டாக்டர் படம் வெற்றி பெற்றதால் ரெடின் கிங்ஸ்லி அதிக பந்தா காட்டி வருவதாகவும். இயக்குனர்களிடம் தனக்கு பிடித்த மாதிரி தான் நடிப்பேன் என்னை யாரும் எந்த கேள்வி கேட்கக் கூடாது என கட்டளை போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு படம் வெற்றி பெற்றதால் இந்த அளவிற்கு சீன் போடக் கூடாது என்று சினிமாத்துறையினர் பலரும் ரெடின் கிங்ஸ்லி மீது கோபத்தில் உள்ளனராம்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!