ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
Author: Selvan26 December 2024, 12:52 pm
அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தில் ராஜு
புஷ்பா 2 பிரச்சனையில் ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்துள்ள நிலையில் ஒட்டு மொத்த தெலுங்கானாவும் அல்லு அர்ஜுன் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபை கூட்டத்தில் அல்லு அர்ஜுனை பகிரங்கமாக தாக்கி பேசினார்.மேலும் அவர் சிறப்பு காட்சிகளை ரத்து செய்து,டிக்கெட் விலையை குறைக்க போவதாக தெரிவித்தார்.இதனால் தெலுங்கு சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படியுங்க: லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினர்,இந்த பிரச்சனையை அரசுடன் விரைவில் பேசி தீர்க்க வேண்டும் என ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்,இதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு தில் ராஜு தலைமையில் திரையுலக பிரபலங்கள் ரேவந்த் ரெட்டியை சந்தித்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பல கருத்துக்களை முன்வைப்பதோடு தெலுங்கானா அரசுக்கும்,திரைஉலகத்திற்கும் உள்ள நடுநிலையை கண்டறிய வேண்டும் என தில் ராஜு வலியுறுத்தியுள்ளார்.ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடுப்பதிற்கு 2 கோடி நஷ்ட ஈடு கொடுக்கப்பட்ட நிலையில்,இந்த சந்திப்பின் முடிவு அல்லு அர்ஜுனுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.