“அதை பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கலாம்”.. நடிகை ரேவதியின் பட வாய்ப்பு குறைய இது தான் காரணம்..!

Author: Vignesh
15 February 2023, 11:30 am

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.

மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

revathi - updatenews360.png 2

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

revathi - updatenews360.png 2

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், ரேவதியின் வளர்ச்சி ஏன் தடைப்பட்டது? எனக் கேட்டத்தற்கு “மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே ரேவதி திருமணம் செய்துகொண்டது தான் அவரின் வளர்ச்சி தடைபட்டதற்கு முதல் காரணமாக இருந்தது.

revathi - updatenews360.png 2

ஆனாலும் திருமண வாழ்க்கையிலும் அவருக்கு சரியான நிலை அமையவில்லை என்றாலும், அதற்கு பின்னால் நடிப்புத் துறையில் முழு கவனத்தை செலுத்தாமல் ரேவதி டைரக்சன் துறையில் கவனம் செலுத்தினார்.

Chitra Lakshmanan - updatenews360

அதுவும் அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியாததற்கு ஒரு காரணம்” என்று பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் பதிலளித்திருந்தார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 527

    4

    2